நாயகன் படத்தின் தொடர்ச்சியா... தக் லைப் : கமல் பதில் | இல்லறத்தில் 25வது ஆண்டு, சினிமாவில் 30வது ஆண்டு | விஷால், தன்ஷிகா இணைய காரணமான டி.ராஜேந்தர் | கர்மா சும்மா விடாது : சமந்தா காதலரின் மனைவி சாபம் | பிளாஷ்பேக்: வெள்ளி விழா ஆண்டில் 'குஷி' | பிளாஷ்பேக் : முதன் முதலாக 3 வேடங்களில் நடித்த சின்னப்பா | பெயரை மாற்றிய நடிகர் ஹம்சவர்தன்; 2 படங்களிலும் 'கமிட்' ஆனார் | பிளாஷ்பேக்: ஒரே இரவில் கதை எழுதி உருவாக்கப்பட்ட “ஓர் இரவு” திரைப்படம் | 'வணங்கான்' படத்தில் 'மிஸ்' ஆன வாய்ப்பு, இப்போது சூர்யா 46ல்… | விஷால், சாய் தன்ஷிகா வயது வித்தியாசத்தை ஆராயும் ரசிகர்கள்!! |
யூடியூப்பில் வி.ஜே. சித்து விளாக்ஸ் மூலம் பிரபலமானவர் சித்து. சமீபத்தில் ‛டிராகன்' படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால், வி.ஜே. சித்து சினிமாவிற்கு வந்ததே இயக்குனர் ஆக வேண்டும் என்கிற ஆசையுடன் தான். தற்போது அது நிறைவேறியது என்கிறார்கள். அதன்படி, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை வி.ஜே.சித்து இயக்கி அவரே கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கான புரோமோ ஷூட் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த புரோமோ வீடியோவில் வி.ஜே. சித்து, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இதனை அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கின்றனர். மே மாதத்தில் இதற்கான படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.