ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியருக்கு இந்த வருட ஆரம்பமே அமர்க்களமாக துவங்கியுள்ளது. அஜித்துடன் இணைந்து அவர் நடித்த துணிவு படம் கடந்த பொங்கல் பண்டிகை ரிலீசாக வெளியானது. அதற்கு அடுத்த வாரமே அவர் மலையாளத்தில் நடித்திருந்த ஆயிஷா என்கிற திரைப்படமும் வெளியானது. இந்தப்படம் இந்தோ அரபு கூட்டு தயாரிப்பில் உருவான படம். அதனால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக அரேபிய சேனல்களிலும் கலந்து கொண்டு பேட்டி கொடுத்து வருகிறார் மஞ்சு வாரியர்.
அந்த வகையில் பிரபல அரேபிய யூடியூபர் காலித் அல் அமீரி என்பவரின் சேனலில் ஆயிஷா படம் பற்றி பல தகவல்களை பகிர்ந்துகொண்ட மஞ்சு வாரியர் அவருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அன்புள்ள காலித் அல் அமீரி, உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்களுடன் பேசி, சினிமா, பயணம் மற்றும் வாழ்க்கையின் மீதான உங்கள் அன்பைப் புரிந்துகொள்ள அற்புதமான நேரம் கிடைத்தது. மேலும் 'ஆயிஷா'வைப் பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ள உண்மையான ஆர்வம் காட்டியதற்கு நன்றி. விரைவில் உங்களை மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.