ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள திரையுலகில் 40 வருடங்களுக்கு மேலாக பிரபல பாடலாசிரியராக அறியப்பட்டவர் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன். 78 வயதான இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று காலமானார். இவர் மலையாளத்தில் 200 படங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட்டான பல பாடல்களை எழுதியுள்ளார். அது மட்டுமல்ல எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இன்னொரு பக்கம் கேரளாவில் வெளியாகும் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிமாற்று படங்களுக்கு மலையாளத்தில் வசனம் எழுதுவதிலும் கை தேர்ந்தவராக விளங்கினார். குறிப்பாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மகதீரா, ஈகா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் மலையாளத்தில் வெளியானபோது அதற்கு வசனம் எழுதியது இவர்தான். இவரது மறைவுக்கு மலையாள திரை உலகை சேர்ந்தவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.