பிளாஷ்பேக் : பிரபு, கார்த்திக் நடிக்க மறுத்த படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : உலக போர், சென்னை மாகாணத்தை கிண்டல் செய்த படம் | ஒரு இடைவெளிக்குத் தயாராகும் தமிழ் சினிமா | 'டிராகன்' படத்தில் ஐந்து இயக்குனர்கள் | அதிக பணம் கொடுத்து தடுமாறும் ஓடிடி நிறுவனங்கள் | சிரஞ்சீவிக்கு 'யுகே' பார்லிமென்ட்டில் பாராட்டு | ஹிந்தி படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடிய தனுஷ் | 'லியோ' கதைதான் 'குட் பேட் அக்லி' கதையா? | 60வது வயதில் புது காதலியை அறிமுகம் செய்த அமீர்கான் | இப்படி செய்தால் வாய்ப்பு கிடைக்குமா? : சிவாங்கி நெத்தியடி பதில் |
தெலுங்கு நடிகரும், முன்னாள் அரசியல்வாதி, முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவிக்கு 'யுனைட்டட் கிங்டம்' பார்லிமென்ட்டில் மார்ச் 19ம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது. சமுதாயத்திற்கு சிறப்பான பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. பார்லிமென்ட் உறுப்பினர்களால் இந்த விழா ஏற்பாடு செய்யப்படடுள்ளது.
'பிரிட்ஜ் இந்தியா' அமைப்பும், சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது. இது சினிமாவிற்காக மட்டுமல்லாமல், பொது சேவைக்காகவும், கலாச்சார தலைமைத்துவத்திற்காகவும் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் யுகே குடியுரிமை சிரஞ்சீவிக்கு மரியாதை நிமித்தமாக வழங்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதை அவரது குழுவினர் மறுத்தனர். செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் தற்போது சிரஞ்சீவிக்கு பாராட்டும், விருது வழங்குவதும் நடைபெற உள்ளது.