வெங்கட் பிரபுவிடம் அவகாசம் கேட்ட அக்ஷய் குமார் | கார்த்தியை இயக்க போகும் கவுதம் மேனன் | ஏஜ தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய படம் | ஓடிடியில் நேரடியாக வெளியான ஹாலிவுட் படம் | பிளாஷ்பேக் : ஜெயலலிதாவை பாடகியாக்கிய கே.வி.மகாதேவன் | பிளாஷ்பேக் : இன்று 'ஆலம் ஆரா' பிறந்தநாள் | இளையராஜாவிற்கு அரசின் சார்பில் விழா : முதல்வர் ஸ்டாலின் | புஷ்பா கேரக்டரில் நடிக்க மறுத்தேன் - ரேஷ்மா பசுபுலேட்டி | பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு சினிமாவில் நடந்த அவமானம் | ரன்யா ராவ் கதாநாயகியாக நடித்த வாகா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் |
1980களில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் கே ரங்கராஜ். 1983ம் ஆண்டு மோகன், ராதா, பூர்ணிமா ஜெயராம் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'நெஞ்சமெல்லாம் நீயே' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
அதன் பின் 'உன்னை நான் சந்தித்தேன், உதய கீதம், கீதாஞ்சலி, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நினைவே ஒரு சங்கீதம்” உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார். கடைசியாக 1992ல் வெளிவந்த 'எல்லைச்சாமி' என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் சரத்குமார், ரூபிணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
33 வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' படம் நாளை திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்த், பூஜிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்தனை வருட இடைவெளியில் வேறு யாரும் படம் இயக்க மீண்டும் வந்திருக்க முடியாது.