'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த படம் 'புஷ்பா 2'. அப்படத்தின் பிரிமியர் காட்சி ஐதராபாத்தில் நடந்தபோது அதில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற 39 வயது பெண் ஒருவர் இறந்து போனார். அவரது மகன் 9 வயதான ஸ்ரீதேஜ் நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தான். அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக செகந்தரபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளான். அவன் உயிர் பிழைத்துக் கொண்ட போதும், அவனுக்கு முழுமையான நினைவு இன்னும் திரும்பாமல் உள்ளது. யாரையும் அடையாளம் காணும் நிலையில் அவன் இல்லையாம். உணவும் வயிற்றுப் பகுதிக்கு நேரடியாக அனுப்பப்படுகிறதாம்.
இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின் தெலங்கானா மாநிலத்தில் அனைத்து விதமான சிறப்புக் காட்சிகளுக்கும் அரசு தடை விதித்தது. பின்னர் அல்லு அர்ஜுனும் அந்த சிறுவனை மருத்துவமனைக்குச் சென்று நேரில் நலம் விசாரித்து வந்தார்.
அந்தக் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் ஒரு கோடி ரூபாயும், தயாரிப்பு நிறுவனமான மைத்ரிமூவி மேக்கர்ஸ் 50 லட்ச ரூபாயும், இயக்குனர் சுகுமார் 50 லட்ச ரூபாயும் நிதியுதவி செய்துள்ளனர்.