டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி | டிரெயின் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | கிரிசில்டா குழந்தைக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: கோர்ட்டில் ரங்கராஜ் மனு | பிளாஷ்பேக்: தோல்வி பயத்தில் டைட்டிலை மாற்றிய டி.ஆர்.மகாலிங்கம் | சிக்கலில் ‛காந்தா' : தடை கோரி வழக்கு | கவுரி கிஷனுக்கு இதுவரை குரல் கொடுக்காத திரிஷா | 25வது நாளை கொண்டாடிய பைசன் | மகனை வாழ்த்தாத அப்பா : பேரனை உற்சாக படுத்தாத தாத்தா |

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என பெயர் எடுத்து வாழ்ந்து, மறைந்தவர் சிவாஜி கணேசன். இவரது மகன்களான ராம்குமார் (நடிகர், தயாரிப்பாளர்), பிரபு(நடிகர்), இவர்களின் வாரிசுகளான துஷ்யந்த் (நடிகர், தயாரிப்பாளர்), விக்ரம் பிரபு(நடிகர்) ஆகியோரும் சினிமாவில் பயணித்து வருகின்றனர்.
ராம் குமாரின் மகனான துஷ்யந்த், ‛ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரிக்க, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3.74 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதில் மத்தியஸ்தராக நீதிபதி ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். அசல் மற்றும் வட்டி உடன் சேர்ந்து ரூ.9.39 கோடியை திருப்பி செலுத்த துஷ்யந்த்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் இதுதொடர்பாக பதிலளிக்கவும் துஷ்யந்திற்கு காலஅவகாசம் வழங்கியிருந்தது. ஆனால் துஷ்யந்த் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி துஷ்யந்தின் அப்பாவும், நடிகர் சிவாஜியின் மகனுமான ராம்குமார், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் திநகரில் உள்ள சிவாஜி வீடு பிரபுவிற்கு சொந்தமானது. அந்த வீட்டில் எனக்கு எந்த பங்கும் இல்லை. ஆகவே இந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.




