நடிகை பிந்து கோஷ் காலமானார் | தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' | முதலில் பேபி அடுத்து பேப்! அமலாபால் வெளியிட்ட வீடியோ பதிவு | 'பராசக்தி' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரம்மாண்ட ஹோம் ஸ்டுடியோ! | வெளியீட்டிற்குத் தயாரான சமந்தாவின் முதல் தயாரிப்பு 'சுபம்' | சம்பளத்தை உயர்த்த கமிஷன் வெட்டும் டிராகன் | மார்க்கெட் சரிந்தாலும் பிடிவாதம்: அதிர்ச்சி கொடுத்த தாரா நடிகை | தனுஷூக்கு உதவி இயக்குநர், விஜய்யுடன் இணைந்து நடிக்கும் பாபா பாஸ்கர்! | விஷ்ணு விஷால், ராம்குமார் கூட்டணியில் ‛இரண்டு வானம்' |
முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களுக்கு பிறகு இயக்குனர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் கடந்த சில வருடங்களாக புதிய படம் ஒன்று உருவாகி வந்தது.
இன்று இப்படத்தை 'இரண்டு வானம்' என தலைப்பு வைக்கப்பட்டதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதன் பெரும்பாலான படப்பிடிப்பை ஊட்டியில் நடத்தியுள்ளனர். இப்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
இவர்கள் கூட்டணியில் முதலாவதாக உருவான ‛முண்டாசுப்பட்டி' படம் காமெடியாகவும், இரண்டாவதாக உருவான ‛ராட்சசன்' படம் திரில்லராகவும் வெளிவந்த நிலையில், 3வது படமான ‛இரண்டு வானம்', காதல் கதையாக வெளிவர உள்ளது.