ஜில்லுனு ஒரு காதலை ஞாபகப்படுத்தும் 'சூர்யா 46' பட போஸ்டர் | மீண்டும் நடிக்க வருகிறார் அப்பாஸ் | கேரளாவில் படமான சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் | தனுஷ் பட கிளைமாக்சை மாற்ற இயக்குனர் எதிர்ப்பு | இளையராஜா பெயரை நீக்கிய வனிதா | மீண்டும் கதை நாயகியான சுவாசிகா | மாரீசனுக்காக வடிவேலு ‛வெயிட்டிங்' | தமிழில் முதல் ஏஐ தொழில்நுட்ப இசை ஆல்பம் | ‛ஜென்ம நட்சத்திரம்' நிறைய சொல்லிக் கொடுத்தது : தமன் | பிளாஷ்பேக்: இதய கோவிலை இயக்கியதற்காக வருந்திய மணிரத்னம் |
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மூத்த மகன் ராம்குமாருக்கு துஷ்யன், இரட்டையர்களாக தர்ஷன், ரிஷயன் என 3 மகன்கள். இதில் துஷ்யந்த் பல படங்களில் நடித்தார். பின்னர் தயாரிப்பாளர் ஆனார். தர்ஷன் சினிமா ஆர்வத்தி்ல் இருக்கிறார். புனே திரைப்பட கல்லுாரி, டில்லி ஸ்கூல் ஆப் டிராமாவில் படித்து இருக்கிறார். ரிஷயன் வெளிநாட்டில் இருப்பதாக தகவல்.
இந்நிலையில், டில்லியில் படித்த காலத்தில் பூஜா என்ற பெணணை காதலித்து இருக்கிறார் தர்ஷன். கடந்த ஆண்டு டிசம்பரில் இவர்கள் நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடந்தது. இந்நிலையில் தர்ஷன், பூஜா திருமணம் நாளை(ஜுன் 8) காலை சென்னையில் நடக்கிறது. இன்று வட இந்திய முறைப்படி சில சடங்குகள் நடக்கின்றன. அவர்கள் குடும்பத்தினர், நெருங்கிய வட்டாரத்துக்கு மட்டுமே திருமண அழைப்புகள் அனுப்பபட்டுள்ளன. விரைவில் தர்ஷன் ஹீரோ ஆகப்போகிறார். அதற்கான பணிகள் நடக்கின்றன என்று கூறப்படுகிறது.