தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
'இருட்டு அறையில் முரட்டு குத்து' தற்போது வெளிவந்துள்ள 'பயர்' மாதிரியான அடல்ட் கண்டன்ட் படம் அந்த காலத்திலும் வெளிவந்துள்ளது. காட்சிகள் ஆபாசமாக இல்லா விட்டாலும் வசனங்களும், படத்தின் கதை, திரைக்கதையும் அடல்ட் கண்டன்ட்டாக இருக்கும்.
அப்படி ஒரு படமாக வெளியாகி பொதுமக்களிடமிருந்தும், சினிமா பார்வையாளர்களிடமிருந்தும் வெறுப்பை சம்பாதித்த படம் 'முத்து எங்கள் சொத்து'. 1983ம் ஆண்டு ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய இந்த படத்தில் பிரபு, ராதா, ராஜீவ், வேணு அரவிந்த், கீதா, கே.ஏ. தங்கவேலு, மனோரமா, அனுராதா, வனிதா, பூர்ணம் விஸ்வநாதன், எஸ்.என்.பார்வதி, தேங்காய் ஸ்ரீனிவாசன், சிவச்சந்திரன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். 1983ம் ஆண்டு வெளியானது.
கதைப்படி பூர்ணம் விசுநாதனுக்கு ராஜீவும், வேணு அரவிந்தும் மகன்கள். இருவருமே ஜாலி பேர்வழிகள். அப்பாவின் சொத்துக்களை சுரண்டி, நடன அழகி அனுராதாவிடம் கொடுத்து அவர் அழகில் மயங்கி கிடப்பவர்கள்.
இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் பூர்ணம் விஸ்வநான். இருவரில் யாருக்கு முதலில் குழந்தை பிறக்கிறதோ அந்த குழந்தைக்கே எனது சொத்துக்கள் சொந்தம் என்று கூறிவிடுகிறார். இதனால் இருவரின் மனைவிகளும் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள போட்டி போட்டு கணவன்மார்களை 'கட்டில் டார்ச்சர்' செய்வதுதான் திரைக்கதை. இந்த பிரச்சினையை அந்த வீட்டில் வேலைக்காரனாக இருக்கும் முத்துவும்(பிரபு) அவர் காதலிக்கும் சமையல்காரி ராதாவும் எப்படி தீர்த்து வைக்கிறார்கள் என்பது கதை.
பஞ்சு அருணாசலம் நேரடியாகவே ஆபாச வசனங்களை எழுதி கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். நல்ல படங்களை இயக்கி பெயரெடுத்த ரங்கராஜன் இந்த படத்தையும் எடுத்து வாங்கி கட்டிக் கொண்டார். எப்படி இருந்தாலும் படம் 100 நாளை தாண்டி ஓடி விழாவும் கொண்டாடியது.