தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் |

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் அனஸ்வரா ராஜன். தமிழில் திரிஷா நடித்த 'ராங்கி' நடித்த அவர், தற்போது உருவாகி வரும் '7ஜி ரெயின்போ காலனி' இரண்டாம் பாகத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் கடந்த ஜனவரி மாதம் வெளியான 'ரேகசித்திரம்' என்கிற படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அடுத்ததாக அவர் நடித்துள்ள 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சுலர்' என்கிற படம் வெளியாக இருக்கிறது. ஆனால் இந்த படம் குறித்து புரமோஷன் செய்வதற்கு அனஸ்வரா ராஜன் மறுப்பதாக படத்தின் இயக்குனர் தீபு கருணாகரன் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மம்முட்டி, பிரித்விராஜ், திலீப், மஞ்சு வாரியர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கியவர் தீபு கருணாகரன். தற்போது இவர் தயாரித்து, இயக்கியுள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சுலர் படத்தில் பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித் கதாநாயகனாக நடித்துள்ளார். படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல்களை 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு ஆடியோ கம்பெனிக்கு விற்றுள்ளார் தீபு கருணாகரன். கதாநாயகி பிரபலமானவர் என்பதால் அவரது இன்ஸ்டாவை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள் என்பதாலும் அவர் இந்த பாடல்களை புரமோட் செய்தால் நன்றாக இருக்கும் என தீபு கருணாகரன் விரும்பினார். ஆனால் பாடல்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட புரமோஷன் செய்ய மறுக்கிறாராம் அனஸ்வரா ராஜன்.
இதுகுறித்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது கூட இவரது அழைப்பை அவர் ஏற்கவில்லையாம். அவரது அம்மா மற்றும் மேனேஜர் மூலமாக தொடர்பு கொண்டபோது அவர்களிடமிருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை. இறுதியில் படத்தின் நாயகன் இந்திரஜித் அனஸ்வராவுக்கு போன் செய்து நீ செய்வது சரியில்லை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது தான் முறை என்று சொல்லியும் கூட அதையும் புறந்தள்ளி விட்டாராம் அனஸ்வரா ராஜன்.
“இத்தனைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து அனஸ்வரா ராஜன் நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடக்காமல் தேங்கி நின்றபோது கூட நிச்சயமாக இந்த படம் நல்லபடியாக முடியும், நான் உங்களுடன் இருப்பேன் சார் என்று எனக்கு அவ்வளவு நம்பிக்கையாக உற்சாகமளித்த அனஸ்வரா ராஜன் இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட இந்த படத்தின் பாடல்களை புரமோஷன் செய்ய மறுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நிச்சயமாக சங்கத்தில் இந்த பிரச்னையை முறையிட்டால் அவர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து தான் ஆக வேண்டும். அப்படி செல்லாமல் இதற்கு சுமூகமாக தீர்வு காண விரும்புகிறேன்” என்று தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் தீபு கருணாகரன்.




