சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
தமிழில் தற்போது முன்னணி இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான படம் 'மாநகரம்'. அப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சந்தீப் கிஷன். இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அப்படம் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் சந்தீப் கிஷன் பேசியது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
'கூலி' படப்பிடிப்பு நடக்கும் போது சென்று ரஜினிகாந்த்தையும், லோகேஷையும் சந்தித்துள்ளார். நண்பன் என்ற முறையில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதாகவும், படத்தின் 45 நிமிடக் காட்சிகளைப் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 'கூலி' படம் நிச்சயம் 1000 கோடி வசூலைப் பெறும் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
கடந்த வருடம் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து 'கூலி' படத்தில் சந்தித்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார் சந்தீப் கிஷன்.