ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை |

தற்போது ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் 'சிக்கந்தர்' என்ற படத்தை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸ், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 23வது படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி இந்த படத்துக்கு 'மதராஸி' என்று டைட்டில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். அது மட்டுமின்றி இப்படத்துக்கு அப்படி ஒரு டைட்டில் வைத்ததற்கு என்ன காரணம் என்பது குறித்தும் அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், ''இந்த 'மதராஸி' படம் ஆக்சன் கதையில் தயாராகி வருகிறது. குறிப்பாக அமரனுக்கு பிறகு இந்த படம் சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லும் படமாக இருக்கும். வட இந்தியாவில் உள்ள மக்கள் தென்னிந்திய மக்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. அந்த வகையில், தென்னிந்திய மக்களை மதராஸி என்று தான் அவர்கள் அழைத்து வருகிறார்கள். அதன் காரணமாகவே இந்த படத்துக்கு மதராஸி என்று டைட்டில் வைத்திருக்கிறேன். இந்த படம் பார்க்கும்போது இந்த டைட்டில் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக அனைவரும் கூறுவார்கள்,'' என்று தெரிவித்துள்ளார் ஏ. ஆர். முருகதாஸ்.




