ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விசு போன்று நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் மவுலி. 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பில் குணசித்ர வேடத்திலும், காமெடி வேடத்திலும் நடித்தார். இயக்கிய படங்கள் அனைத்தும் குடும்ப படங்கள். அவர் கதையின் நாயகனாக நடித்த படம் 'அண்ணே அண்ணே'.
இந்த படத்தையும் அவரே இயக்கி இருந்தார். அவருடன் சுமித்ரா, விஜி, வனிதா, சார்லி, வி.கே.ராமசாமி, லியோ பிரபு உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார், தேவி பிரசாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
கட்டாந்தரையில் படுத்துறங்க துடிக்கும் பணக்காரரும், பஞ்சு மெத்தையில் படுத்துறங்க ஆசைப்படும் ஏழையும் இடம் மாறிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கதை. படம் நாடகம் பார்ப்பது போன்று இருப்பதாக அன்றைக்கு விமர்சனம் எழுந்தது. இளையராஜாவின் பாடல்களும் படத்திற்கு உதவில்லை. படம் தோல்வி அடைந்தது.