ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கயாடு லோஹர். மாடலிங் போட்டிகளில் நுழைந்து அப்படியே சினிமாவுக்கு வந்தவர். கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். அடுத்த வாரம் வெளியாக உள்ள 'டிராகன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அந்தப் படத்தை அடுத்து 'இதயம் முரளி' படத்திலும் நடித்து வருகிறார்.
நேற்று முன்தினம் வியாழனன்று மாலை 'இதயம் முரளி' படத்தின் அறிவிப்பு நிகழ்வு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. அதில் கலந்து கொண்டு முதல் முறையாக மேடையேறிப் பேசினார். அந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற 'டிராகன்' படத்தின் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஏற்கெனவே, 'இதயம் முரளி' நிகழ்ச்சியில் மேடையேறி முதல் முறையாகப் பேசியவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்த 'டிராகன்' நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது, “இதுதான் என்னுடைய முதல் மேடை, அதனால் ரொம்ப பதட்டமாக இருக்கிறேன்,” என பேசி அதிர்ச்சி அளித்தார்.
ஆரம்பத்திலேயே நன்றாகப் பொய் பேசும் கயாடு லோஹர் தமிழ் சினிமாவில் பிழைத்துக் கொள்வார்.




