யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தமன். தமிழிலும் அவ்வப்போது இசையமைத்து வருபவர். தற்போது 'இதயம் முரளி' படத்திற்கு இசையமைத்து முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இவர் இசையமைப்பில் அடுத்த தமிழ்ப் படமாக 'சப்தம்' படம் பிப்ரவரி 28ம் தேதி வெளியாக உள்ளது.
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த 'அகண்டா, வீர சிம்மா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகு மாகராஜ்' என தொடர்ந்து அவரது படங்களுக்கு இசையமைத்து வருபவர் தமன். தற்போது 'அகண்டா 2' படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
தனது படங்களுக்கு அதிரடியான இசையைக் கொடுத்து வரும் தமனைப் பாராட்டி அவருக்கு ஒரு 'போர்சே' காரைப் பரிசாக வழங்கியுள்ளார் பாலகிருஷ்ணா.