தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
மார்வெல் காமிக்ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஹீரோ 'கேப்டன் அமெரிக்கா'. மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இதுவரையில் 'மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' வரிசையில் 'கேப்டன் அமெரிக்கா - தி பர்ஸ்ட் அவஞ்சர் (2011), கேப்டன் அமெரிக்கா - தி வின்டர் சோல்ஜர் (2014), கேப்டன் அமெரிக்கா - சிவில் வார் (2016)” ஆகிய படங்களை எடுத்துள்ளது.
அது மட்டுமல்லாது 'தி அவஞ்சர்ஸ் (2012), அவஞ்சர்ஸ் - ஏஜ் ஆப் அல்ட்ரான் (2015), அவஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார் (2018), அவஞ்சர்ஸ் - என்ட் கேம் (2019) ஆகிய படங்களிலும் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது.
நாளை பிப்ரவரி 14ம் தேதி 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' படம் வெளியாக உள்ளது. ஜுலியஸ் ஓனா இயக்கியுள்ள இந்தப் படத்தில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் ஆண்டனி மாக்கி நடித்துள்ளார். மார்வெல் ரசிகர்களால் இப்படம் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் வரிசையில் கடைசியாக 2024ம் வருடம் 'டெட்பூல் அன்ட் உல்வெரின்' படம் வெளிவந்தது. இதற்கடுத்து மே 2ம் தேதி 'தண்டர்பால்ட்ஸ்' படம் வெளியாகப் போகிறது. இதில் அவஞ்சர்ஸ் வரிசையில் 'அவஞ்சர்ஸ் - டூம்ஸ்டே' படம் அடுத்த வருடம் 2026 மே 1ல் வெளியாக உள்ளது.