படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
கனா படத்தின் மூலம் நடிகர் ஆக அறிமுகமானவர் தர்ஷன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார். அதன் பிறகு துணிவு உள்ளிட்ட ஒரு சில படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தார்.
இந்நிலையில் அறிமுக இயக்குனர் ராஜ வேல் இயக்கத்தில் தர்ஷன் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். இதில் அர்ஷா பைஜூ, காளி வெங்கட், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பை 40 நாட்களில் முடித்தனர். ஒரு வீட்டை சுற்றி நடக்கும் கதையில் இப்படம் உருவாகி வந்தது. தற்போது இந்த படத்திற்கு 'ஹவுஸ் மேட்ஸ்' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.