தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இந்தாண்டு குடும்ப கதைகளுக்கு மவுசு கூடியிருக்கிறது. கொஞ்சம் பேமிலி கலாட்டாவுடன் சென்டிமெண்ட் கலந்திருந்தால் மினிமம் கியாரண்டி படம் என்ற நிலை. குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி, 3பிஎச்சே மாதிரியான படங்கள் அதிகம் வரத் தொடங்கி உள்ளது. தயாரிப்பிலும் உள்ளது.
அந்த வரிசையில் அடுத்து வருகிறது 'ஹவுஸ் மேட்ஸ்'. இந்த படத்தில் கூடுதலான ஒரு ஸ்பெஷல் என்னவெற்றால் சின்னதாக ஒரு திரில்லரும் இருக்கிறது.
பிளேஸ்மித் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.விஜயபிரகாஷ் தயாரித்துள்ளார், டி.ராஜவேல் இயக்கி உள்ளார். தர்ஷன் கதாநாயகனாகவும், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் நடித்திருக்கின்றனர். எம்.எஸ்.சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ராஜேஷ் முருகன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது ''ஒரு அபார்ட்மெண்டில் அருகருகே வசிக்கும் ஒரு காதல் தம்பதி, குழந்தையுடன் இருக்கும் மிடில் கிளாஸ் தம்பதி ஆகியோருக்கிடையே நடக்கும் பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளுமே கதை. அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி கலக்கலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ளது'' என்றார்.