'காந்தாரா சாப்டர் 1' டப்பிங்கை முடித்த ருக்மிணி வசந்த் | 'கூலி' பைனல் வசூல் அறிவிக்கப்படுமா ?, ரசிகர்கள் எதிர்பார்ப்பு | காதலுக்காக பாலினத்தை மாற்றும் ஜோடி: 'சரீரம்' படக்கதை இதுதான் | தமிழில் ரீமேக் ஆன ஸ்ரீலீலா படம்; செப்.,26ல் ரிலீஸ் | கர்நாடக அரசை எதிர்த்து மல்டிபிளக்ஸ் சங்கம் வழக்கு | நாயகியான நாடக நடிகை திரிப்தி | பிளாஷ்பேக்: சிந்து பைரவிக்கு 40 வயது | பிளாஷ்பேக்: முதல் ஸ்டைல் வில்லன் சிவாஜி | 'மிராய்' நாயகன், இயக்குனருக்குக் கார் பரிசு | ஓடிடியிலிருந்து 'குட் பேட் அக்லி' நீக்கம் : யு-டியூபில் நீக்கப்படாத பாடல்கள் |
'பிக் பாஸ்' தர்ஷன் நடிக்கும் புதிய படம் 'சரண்டர்'. பாடினி குமார் என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூரலிகான் என பலர் நடித்துள்ளனர். விகாஸ் படிஸா இசை அமைத்துள்ளார். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்பீட் பிக்சர் சார்பாக விஆர்வி குமார் தயாரித்துள்ளார்.
அறிவழகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கவுதமன் கணபதி இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது ''இது தேர்தலை மையப்படுத்தும் கதை. தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பாக போலீஸ் நிலையத்தில் ஒரு விபரீதம் அரங்கேறுகிறது. அதேவேளை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.10 கோடி காணாமல் போகிறது.
இதில் ஓய்வுபெற இருக்கும் போலீஸ்காரர் லால் மீது பழி விழ, சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சியில் இருக்கும் தர்ஷன் களத்தில் இறங்குகிறார். அவர் எதிர்கொள்ளும் திருப்பங்களே படத்தின் மீதி கதை.
நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என்பதை கதைக்களமாக கொண்ட இப்படம் அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும். இந்தப்படத்தை மிக நேர்மையாக எடுத்துள்ளோம். படத்தில் பாட்டு இல்லை. வேண்டும் என்றே வைக்கவில்லை என்று கூற முடியாது. தேவைப்படவில்லை. இதில் பணியாற்றியுள்ள கேமராமேன், எடிட்டர், இசை என எல்லோருமே எனது குரு அறிவழகனிடமிருந்து வந்தவர்கள் தான். ஒரு டீமாக உழைத்துள்ளோம். படம் நேர்த்தியாக வந்துள்ளது' என்றார்.