கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை | நடிகர் விஸ்வக் சென் வீட்டில் வைர நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருட்டு | 'கூலி' படப்பிடிப்பு நிறைவு | கவுரி கிஷன் நடித்த வெப் சீரிஸிற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு | ராஜமவுலி படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல மலையாள பாடலாசிரியர் மரணம் | டைம் ஸ்கொயரில் வெளியிடப்பட்ட எம்புரான் பட டிரைலர் | மோகன்லால் மகனை இயக்கும் பிரம்மயுகம் இயக்குனர் |
பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் அழகான வில்லன்கள் பட்டியலில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர். சமீபத்தில் கூட சுந்தர்.சி நடிப்பில் அவர் வில்லனாக நடித்திருந்த ‛மதகஜராஜா' திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியாகி உள்ளது. வில்லன் நடிகராக இருந்தாலும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கொரோனா காலகட்ட சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வசதி வாய்ப்பு இன்றி தவித்த ஏழை மக்கள் பலருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து மக்களின் மனதில் ரியல் ஹீரோவாக இடம் பிடித்தார் சோனு சூட். இந்த நிலையில் மோசடி வழக்கில் சோனு சூட்டை கைது செய்வதற்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக சோனு சூட் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு மோசடி வழக்கு தொடர்பான வழக்கில் நான் ஒரு முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு அதற்கான சம்மன் தான் எனக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரும் திங்கள் (பிப்-10) அன்று எனது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் என்னுடைய சார்பாக இந்த விவகாரத்தில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்க இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தில் நான் நிறுவன தூதராகவோ அல்லது வேறு எந்த விதத்திலோ தொடர்பில் இல்லை.. தேவையில்லாமல் தற்போது மீடியாக்களின் கவனத்தை என் மீது திருப்ப முயற்சி நடக்கிறது.. பிரபலங்கள் எப்போதுமே இப்படி எளிதாக குறி வைக்கபடுவது வருத்தம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் நான் நிச்சயம் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.