இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
அஜித் நடிப்பில் ‛விடாமுயற்சி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் அணி, 3வது இடம் பிடித்து சாதித்தது. போட்டிக்கு முன்பான பயிற்சியில் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியிருந்தது. ஆனாலும், போட்டியில் பங்கேற்று அசத்தினார். அதனைத்தொடர்ந்து தற்போது போர்ச்சுக்கலில் நடைபெற உள்ள கார் ரேஸ்க்கான பயிற்சியில் அஜித்தின் ‛அஜித்குமார் ரேஸிங்' அணி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோதும் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது. 2வது முறையாக ஏற்பட்ட இந்த விபத்திலும் அஜித்குமாரின் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கார் மட்டும் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்து தொடர்பாக அஜித் அளித்துள்ள பேட்டியில், ‛‛எங்களுக்கு மீண்டும் நல்ல நேரமாக அமைந்துள்ளது. எனது கார் சிறிய அளவிலான விபத்தில் சிக்கியது. யாருக்கும் எதுவும் நடக்கவில்லை. எங்களது குழு விரைந்து செயல்பட்டதால் எந்த பாதிப்பும் இன்றி பயிற்சியை தொடர்கிறேன். காரை எனது மெக்கானிக் குழுவினர் சரி செய்துவிட்டனர். மீண்டும் பெருமையை நிலை நாட்டுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. விபத்து ஏற்பட்டவுடன் எங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: மோட்டார் ஸ்போர்ட்ஸில் எனது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி தருகிறது. அடுத்தடுத்து நான் பங்கேற்க இருக்கும் போட்டிகளை, ரசிகர்கள் தேடி தெரிந்து கொள்ள நினைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.