பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மோகன்லால் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 'விருஷபா'. நந்த கிஷோர் எழுத்து இயக்கத்தில் தயாராகிறது. கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலி பிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. மோகன்லாலுடன் ஷான்யா கபூர், ஷாரா கான், ரோஷன் மேகா, ராகினி திவேதி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஒரு மலையாள படத்தில் இத்தனை பாலிவுட் நடிகர்கள் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை.
பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஷோபா கபூர், ஏக்தா கபூர், பத்ம குமார், வருண் மாத்தூர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் வியாஸ், விஷால் குர்னானி மற்றும் ஜூஹி பரேக் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் 'விருஷபா' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதனை மோகன்லாலுடன் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளது. தெலுங்கு, மலையாளத்தில் நேரடியாக தயாராகும் படம், ஹிந்தி, தமிழ், கன்னட மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. வரும் தீபாவளி அன்று படம் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.