கண்ணப்பா படத்தில் ருத்ராவாக பிரபாஸ் | சிவகார்த்திகேயனை இயக்கும் அஹமது | லிமிட் தாண்டினால் தடை: மகளுக்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக்: சவுராஷ்டிர மொழி சொற்கள் இடம்பெற்ற ஒரே தமிழ் திரையிசைப் பாடல் | இளையராஜா முன் அவரது பாடல்களுக்கு நடனமாடி வசீகரித்த ரஷ்ய கலைஞர்கள் | நடிகராக 50வது படம், தயாரிப்பாளராக மாறிய சிம்பு | சங்கராந்திகி வஸ்துனம் - ஒரே மொழியில் வெளியாகி 300 கோடி வசூல் | புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 வருடம் கழித்து வெளியிடப்பட்ட பாடல் | நடிகர் முகேஷ் மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்கு | சினிமாவில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் |
மலையாளத்தில் 2019ல் பஹத் பாசில் நடிப்பில் கும்பலாங்கி நைட்ஸ் என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் மது சி நாராயணன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தின் நாயகர்கள் என ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' புகழ் சவ்பின் சாஹிர், ஸ்ரீநாத் பாஷி, ஷேன் நிகம், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்திருந்தாலும் இடைவேளைக்கு பிறகு படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பஹத் பாசில் தான் ரசிகர்களின் ஒட்டுமொத்த வரவேற்பை அள்ளினார். அப்படி ஒரு வெற்றி படத்தை கொடுத்த மது சி நாராயணன் அதன்பிறகு கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக படம் எதுவும் இயக்கவில்லை.
இதற்கிடையே அவர் மோகன்லாலை வைத்து படம் இயக்க உள்ளார் என்று சொல்லப்பட்டு வந்து பின்னர் அந்த தகவலும் அப்படியே அமுங்கி போனது. இந்த நிலையில் தான் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் தனது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். பிரேமலு படத்தில் நடித்த நஸ்லேன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கான தேர்வு நடப்பது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்திலும் அறிவித்துள்ளார் மது சி நாராயணன்.