6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! |
நடிகர் மன்சூர் அலிகான் 90ஸ் மற்றும் 20ம் ஆரம்ப காலகட்டம் வரை பெரும்பாலான படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதுவரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக இவர் பல கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார்.
தற்போது ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபியன்கர் இசையமைக்கின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கிறார். இதில் வில்லன் வேடத்தில் மன்சூர் அலிகான் நடித்து வருகிறார். கடந்த வாரத்திலிருந்து இவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர். சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், சிவதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.