மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. தமிழில் விஜய் நடித்து வெளிவந்த 'வாரிசு' படத்தைத் தயாரித்தவர். தெலுங்கில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை எடுத்து வசூலைக் குவித்தவர்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், டாப் நடிகர் ராம் சரண், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி என சுமார் 400 கோடி செலவில் அவர் பிரம்மாண்டமாகத் தயாரித்து பொங்கலுக்கு வெளிவந்த பான் இந்தியா படமான 'கேம் சேஞ்ஜர்' தோல்விப் படமாக அமைந்தது. 50 சதவீதம் கூட வசூலிக்கவில்லை என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல். அதே சமயம் அவர் தயாரிப்பில் வெளிவந்த மற்றொரு படமான 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 40 கோடி பட்ஜெட்டில் தயாராகி 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
'கேம் சேஞ்ஜர்' படத்தின் தோல்வி குறித்து தில் ராஜு, “கதைதான் காரணம், பட்ஜெட் அல்ல. கதையை விடவும் பட்ஜெட், பிரம்மாண்டத்தின் மீது கவனம் செலுத்தியது தவறு. கனமான கதைகள், நம்பிக்கையான இயக்குனர்களை வைத்து எங்கள் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. உச்சத்தில் இருக்கும் நடிகர், இயக்குனர்களுடன் கூட்டணி அமைப்பது முக்கியமல்ல.
கடந்த சில வருடங்களாக குண்டும் குழியுமான பாதையில் சென்று வந்தோம். 'சங்கராந்திகி வஸ்துனம்' வெற்றி எங்களுக்கு சரியான பாதையைக் காட்டியுள்ளது. சிலரது வேண்டுகோளுக்காக அதிக வசூல் என வெளியாகும் பொய்யான வசூல் விவரங்களை, எது உண்மை என மீடியாக்கள்தான் வெளிக்கொண்டு வர வேண்டும்,” என்றும் பேசியுள்ளார்.
'கேம் சேஞ்ஜர்' படத்தின் முதல் நாள் வசூல் 186 கோடி என வெளியிட்டார்கள். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் அந்தப் படத்தின் வசூல் என்ன என்பதை தில் ராஜு வெளியிடவேயில்லை. இப்போதும் படம் தோல்வி என்பதை ஒத்துக் கொண்டுள்ளார்.
'இந்தியன் 2, கேம் சேஞ்ஜர்' என அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைக் கொடுத்த இயக்குனராகிவிட்டார் ஷங்கர்.