துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இருக்கும் வினோதினி, ஒன்றைரை வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் தற்போது திடீரென கட்சியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளிவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்' எனப் பதிவிட்டு விலகலை அறிவித்தார்.
இந்த நிலையில், மநீம கட்சியில் இருந்து விலகியது தொடர்பாக நமது தினமலருக்கு வினோதினி அளித்த விளக்கம்: கட்சியில் இருந்து விலகியது நன்றாக யோசித்தே பிறகு எடுத்த முடிவு. எடுத்தோம் கவிழ்த்தோம் என நான் எதுவும் செய்வதில்லை. சில நாட்களாக எனக்குள் உறுத்தல், குற்ற உணர்வு இருந்தது. கட்சியில் எனது பயணம் பற்றி 2, 3 விஷயங்களில் அறிவுறுத்தினர். தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் இருக்கும்போது, ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஒரு கட்சி, எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும். ஆனால், மநீம ஆளும்கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது. அப்படியிருக்கையில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அப்படியான வேலையில் நான் ஈடுபட்டிருந்தேன்.
ஆனாலும், எனக்கு நேரம் கிடைக்கவில்லை. மேலும், சினிமாவில் முன்னணி இடத்தில் இல்லாததால் பல படங்களில் நடித்தால் தான் கொஞ்சம் ஊதியம் பெற முடியும். கட்சியில் இருந்து விலகல் தொடர்பாக கமல்ஹாசனிடம் பேசவில்லை, எக்ஸ் தளத்தில் மட்டுமே தெரிவித்தேன். கட்சியில் இருந்து சிலர் தொடர்புகொண்டு, சில விஷயங்கள் பற்றி பேசிக்கொள்ளலாம் எனக்கூறினர். கட்சியில் இருப்பவர்கள் யாரும் எதிரி அல்ல, அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறோம்.
கட்சியில் இருந்து 2, 3 விஷயங்களில் பொறுப்பேற்க சொன்னார்கள். ஆனால் என்னால் அதனை முன்னெடுக்க முடியவில்லை. கட்சியில் இருக்கும் அணிகளில் எதை வேண்டுமானாலும் எடுத்து வலுப்படுத்தி இருக்கலாம். ஆனால் என்னால் அதில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. நேரம் இல்லை என்பதால் தான் நான் மநீம.,வை விட்டு வெளியேறினேன். அப்படியிருக்கையில் இப்போதைக்கு எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை. இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.