கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
நரேஷ் சம்பத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ஆரவ், ஆஷிமா நர்வால், யாஷிகா ஆனந்த் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ராஜ பீமா'. பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஆரவ் அப்போது மிகவும் பிரபலமாக இருந்தார். அவரை கதாநாயகனாக வைத்து சில படங்கள் ஆரம்பமாகின. இருந்தாலும் தனக்குக் கிடைத்த பிரபலத்தை ஆரவ் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
இப்போது தியேட்டர்களில் வெளியாக உள்ள இந்தப் படத்தை, இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தப் படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து யூடியுப் தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். அப்படி வெளியான ஒரு படத்தை இப்போது தியேட்டர்களில் வெளியிடுவது ஆச்சரியமாக உள்ளது. 2018ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது. 2019ல் இப்படத்தின் டிரைலரையும் வெளியிட்டுள்ளார்கள். ஆனால், இத்தனை வருட தாமதத்திற்குப் பிறகு படம் தமிழில் வெளியாக உள்ளது.
பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஆரவ், ஓவியா இடையில் காதல் என அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்படத்தில் ஓவியா ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன படம், இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்த வாரம் ஜனவரி 31ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.