Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அபிராமிக்கு சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல்

26 ஜன, 2025 - 06:05 IST
எழுத்தின் அளவு:
Kamal-refused-to-give-a-letter-of-recommendation-to-Abhirami


கமல்ஹாசன் இயக்கி நடித்த ‛விருமாண்டி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபிராமி. அந்த ஒரு படத்திலேயே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றவர் அதன்பிறகு பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ‛வேட்டையன்' படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்த அவர் மீண்டும் கமலுடன் இணைந்து ‛தக் லைப்' படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛‛விருமாண்டி படத்தில் நடித்து வந்த சமயத்தில் நான் சைக்காலஜி மற்றும் கம்யூனிகேஷன் கோர்ஸ் படிப்பதற்காக அமெரிக்காவில் ஓகியாவில் இருக்கும் வூஸ்டர் காலேஜில் சேர விரும்பினேன். இங்கிருந்து பிரபலமான ஒருவரின் சிபாரிசு கடிதம் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். பிரபல கதாசிரியரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் எனக்கு ஒரு சிபாரிசு கடிதம் தந்தார்.

அதே சமயம் கமலுடன் விருமாண்டி படப்பிடிப்பில் நடித்து வந்த சமயத்தில் இது பற்றி கூறி அவரிடமும் ஒரு சிபாரிசு கடிதம் கேட்டேன். ஆனால் சிபாரிசு கடிதம் தர முடியாது என கூறியவர், சினிமாவை விட்டு நீ போகக்கூடாது என்றும் உனக்கு இங்கே நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும் அதற்கு காரணம் கூறினார். ஆனாலும் விருமாண்டி படம் முடிவடைந்த பின்பு எனக்கு அந்த காலேஜில் இருந்து அட்மிஷன் கிடைத்தது. அதனால் படிக்க சென்றுவிட்டேன். இந்த படிப்பு படிக்க வேண்டும் என்பது ஏதோ ஒரு நாளில் எடுத்த முடிவு அல்ல.. பல நாள் கனவு'' என்று கூறியுள்ளார் அபிராமி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்!‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை ... அஜித்துக்குப் போட்டியாக அறிவிக்கப்பட்ட விஜய் படத் தலைப்பு அஜித்துக்குப் போட்டியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தமிழன் - கோவை,இந்தியா
26 ஜன, 2025 - 09:01 Report Abuse
தமிழன் அபிராமி தமிழில் அறிமுகமானது வானவில் என்கிற படத்தில் அர்ஜூன் ஹீரோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)