வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் 'புஷ்பா 2'. படம் வெளியான முதல் நாளிலிருந்தே வசூல் சாதனையைப் படைத்து வந்தது.
தற்போது 50வது நாளை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. 1900 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அதிக வசூலைக் குவித்த படமாக இருக்கிறது.
கடந்த 50 நாட்களில் தெலுங்கில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் 'புஷ்பா 2' படத்திற்கான வரவேற்பு குறையாமல் இருந்தது. தெலுங்கு நடிகர்களில் பிரபாஸூக்கு அடுத்து அதிக வசூலைக் குவித்த நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அல்லு அர்ஜுன். இந்த வசூல் சாதனையை ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோரும் பெற முடியவில்லை.