ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர் தர்ஷன். இவரது தோழி நடிகை பவித்ரா கவுடா. இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் பவித்ரா கவுடாவிற்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் ஆபாச படங்கள், வீடியோக்கள் அனுப்பி தொல்லை கொடுத்ததால், அவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 17 பேரை பெங்களூரு காமாட்சி பாளையா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தர்ஷன் உள்ளிட்ட 17 பேருக்கும் பெங்களூரு உயர்நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி கர்நாடக போலீஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. கைதான 7 பேருக்கும் கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்றும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
மேலும் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கும், கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.