பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், உருவாகி உள்ள படம் ‛2கே லவ்ஸ்டோரி'. புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்க, இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். வரும் பிப்ரவரி 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்பட விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது : 2கே லவ்ஸ்டோரி எனக்கு மிக முக்கியமான படம். வெட்டிங்க் போட்டோகிராபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 'பிரேமலு' ரிலீசான அன்று அது யாருக்கும் தெரியாது, அடுத்த ஷோவில் உலகத்திற்கே தெரிந்தது. அதுபோல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். 'பிரேமலு' மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். என்றார்.