ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
கடந்த 2023ம் ஆண்டில் அறிமுக இயக்குனர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் பல புதுமுகங்களைக் கொண்டு வெளிவந்த படம் 'யாத்திசை'. குறைந்த பட்ஜெட்டில் ஒரு பிரமாண்ட வரலாற்று படத்தை இயக்கி, அசத்தினார். விமர்சகர்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு பாராட்டுகள் கிடைத்தன. இருப்பினும் அதன் பிறகு தரணி ராஜேந்திரனின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் ஜே.கே புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் நடிகை பவானி ஸ்ரீ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை நிகழ்வு சென்னையில் நடந்தது. படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும்.