14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் |
ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தை இயக்கப் போகிறார். அதோடு சூர்யா நடிப்பில் ரோலக்ஸ், மற்றும் இரும்புக்கை மாயாவி என இரண்டு படங்களை இயக்கவும் திட்டமிட்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் தற்போது இரும்புக்கை மாயாவி படத்தை பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா படமாக இயக்கப் போகிறாராம். இதை புஷ்பா, புஷ்பா- 2 படங்களை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.