32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
'ஓ மை கடவுளே' பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்துவின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் 'டிராகன்' என்கிற படத்தில் நடித்து வருகின்றார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கின்றார். இதில் நாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர் ஆகியோர் நடிக்க முக்கிய வேடங்களில் மிஷ்கின், கவுதம் மேனன், வி.ஜே.சிந்து, ஷர்சத் கான் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். காதல் கலந்த கலகலப்பான படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தன்று இத்திரைப்படம் திரைக்கு வருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.