புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
பண்டிகை நாட்களில் புதிய படங்களைப் பற்றிய அப்டேட்டுகள்தான் அதிகமாக வரும். அவற்றின் அறிவிப்புகள், டிரைலர் வெளியீடுகள், பட வெளியீடுகள் என நிறைய வரும். ஆனால், முன்னணி ஓடிடி நிறுவனங்களில் ஒன்றான நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அவர்கள் உரிமைகளை வாங்கியுள்ள படங்களைப் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் 'தக் லைப்', அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி', சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ', துல்கர் சல்மான் நடிக்கும் 'காந்தா', பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' மற்றும் பெயரிடப்படாத படம், துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்', வைபவ் நடிக்கும் 'பெருசு', உள்ளிட்ட படங்களை ஓடிடியில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்கள். தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில்அப்படங்கள் வெளியாகும்.