துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்க 'வாடிவாசல்' படத்தின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜுலை 16, 2021ம் தேதியன்று வெளியானது. அதன்பின் அப்படத்திற்கான 'டெஸ்ட் ஷுட்' 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற போது சில அப்டேட்கள் வெளியானது. படத்திற்காக சூர்யா, ஒரு ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து அதனுடன் பயிற்சி பெற்று வந்தார். அந்த ஆண்டே படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு தள்ளிக் கொண்டே வந்தது.
வெற்றிமாறன் 'விடுதலை' படத்தை இயக்கப் போய்விட்டார். ஒரு கட்டத்தில் 'வாடிவாசல்' படம் ஆரம்பமாகுமா என்ற சந்தேகமும் வெளியானது. சூர்யாவுக்குப் பதிலாக தனுஷ் நடிக்கப் போகிறார் என்றெல்லாம் கூட செய்திகள் வந்தன.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தாணு சற்று முன், “அகிலம் ஆராதிக்க 'வாடிசவாசல்' திறக்கிறது,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 'வாடிவாசல்' மீண்டும் திறக்கப்படுகிறது. மீண்டும் இது மூடப்படாது என்று நம்புவோமாக.