இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஷென் ஸ்டூடியோ சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்துள்ள படம் 'தருணம்'. 'தேஜாவு' படத்தை இயக்கிய அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கி உள்ளார். கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், பால சரவணன் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 14ம் தேதி பொங்கல் அன்று வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழாவில் பேசிய இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் நாயகி ஸ்மிருதி வெங்கட்தான் இதில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி நடிக்க வைத்ததாக கூறினார். மேலும் அவர் பேசியதாவது:
என் முதல் படத்தை முடித்த சமயத்தில் தான், கிஷன் நடித்த படத்தைப் பார்த்தேன். அவர் இந்தப் படத்திற்கு மிகச் சரியாக இருப்பார் என்று என் நண்பரிடம் சொன்னேன். அவரிடம் கதை சொன்னேன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தை புதுமுகங்களை வைத்து இயக்க வேண்டும் என்று நினைத்தேன். ஸ்மிருதி வெங்கட் என்னுடைய 'தேஜாவு' படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் செய்தார், அப்போதே அவரிடம் சொல்லியிருந்தேன், உங்களது நடிப்பு நன்றாக இருக்கிறது, ஒரு நல்ல படத்தில் உங்களைக் கதாநாயகியாகப் போடுவேன் என்றேன். அவர் நம்பவில்லை.
இந்தப் படம் ஆரம்பித்த பொழுது, அவர்தான் சரியாக இருப்பார் என்று சொன்னேன். எல்லோரும் தயங்கினார்கள், ஆனால் நான் அவர்தான் சரியாக இருப்பார், இதுவரை செய்யாதவர் இந்தக் கதாபாத்திரம் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கதை சொன்னேன். சில விசயங்கள் படத்தில் இருக்கும் யோசித்துச் சொல்லுங்கள் என்றேன். அவருக்குக் கதை பிடித்து இருந்தது. இப்படத்தில் மிக நன்றாக நடித்துள்ளார். வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால் ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் படம். என்றார்.