32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
2014ம் ஆண்டு வெளியான படம், 'குற்றம் கடிதல்'. பிரம்மா இயக்கத்தில் ராதிகா பிரசிதா, மாஸ்டர் விஜய், பாவெல் நவகீதன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன் சார்பில் சதீஷ் குமார் தயாரித்திருந்தார்.
தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் தயாராகிறது. இதையும் சதீஷ் குமாரே தயாரிக்கிறார். படத்திற்கு சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார், டிகே இசை அமைக்கிறார். தயாரிப்பாளர் சதீஷ் குமாரே கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சதீஷ்குமார் கூறும்போது “கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நான் நடிக்கிறேன். ஓய்வு பெறும் நேரத்தில் குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது” என்றார்.