32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
துணை நடிகராக பல படங்களில் நடித்த சுகுமார் 'காதல்' படத்தில் நாயகன் பரத்திற்கு நண்பராக நடித்ததன் மூலம் புகழ்பெற்று 'காதல் சுகுமார்' ஆனார். கலகலப்பு, பொன்னான நேரம், விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். திருட்டு விசிடி உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார். தற்போது 'முருகப்பா' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுகுமார் மீது, துணை நடிகை ஒருவர் வடபழனி போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் “நான் துணை நடிகையாக இருக்கிறேன். கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறேன். சினிமாவில் நடிக்கும்போது எனக்கு அறிமுகமான காதல் சுகுமார் என்னோடு நெருக்கமாக பழகினார். பின்னர் காதலித்தார். திருமணம் செய்வதாக கூறி என்னோடு குடும்பம் நடத்தினார். அவ்வப்போது என்னிடமிருந்து பணம், நகைகளை வாங்கினார்.
கடந்த 3 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார். தனக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது என்று கூறி திருமணத்திற்கு மறுத்து வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது பணம், நகைளை திருப்ப பெற்றுத் தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.