தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
மலேசியாவைச் சேர்ந்த கதிரவென் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், 'கண்நீரா'. சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் என்கேஆர் நடித்துள்ளனர். ஏ.கணேஷ் நாயர் ஒளிப்பதிவு செய்ய, ஹரிமாறன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கதிரெவன் கூறியதாவது: காதல் படம் என்றாலே பேண்டஸி இருக்கும் ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட மிகவும் யதார்த்தமான காதல் கதை. 90 சதவீதம் பேர் காதல்ல கண்டிப்பா இருப்பாங்க, இல்ல கடந்து வந்திருப்பாங்க. காதலர்களுக்கு என்னமாதிரியான அணுகுமுறை தேவைப்படுகிறது என்பதை ஆர்ட் பிலிமா இல்லாம கமர்சியல் கலந்து ஜனரஞ்சகமான படமாக உருவாக்கி இருக்கிறோம். படம் பார்ப்பவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் என் வாழ்வில் நடந்தது என் பேமிலியில் நடந்தது என்று ரசிகர்களை குளோஸா அவங்க ஹார்டை டச் பண்ற மாதிரியான மிக்ஸ்சான எமோசன்ஸ் இதில் இருக்கு.
படப்பிடிப்பு முழுவதும் மலேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. முதலில் இந்த படத்தை என் மனைவி கவுசல்யா நவரத்தினம் இயக்குவதாக இருந்தது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் நான் இயக்கினேன். ஆனால், படத்தின் 2ம் பாகத்தை கவுசல்யா நவரத்தினம் இயக்கி முடித்துள்ளார். 2 பாகங்களுமே வித்தியாசமான காதல் கதையுடன் உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.