ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
சுந்தர் சி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில், விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மத கஜ ராஜா'. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ளது.
நேற்று இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் விழா அரங்கிற்குள் நுழைந்த போதே மிகவும் மெதுவாக நடந்து வந்தார். உடலும் மிகவும் இளைத்து காணப்பட்டார்.
நிகழ்ச்சியின் போது மேடை ஏறிப் பேசியபோது அவரது கை நடுங்கியபடியே இருந்தது. வார்த்தைகளும் தொடர்ச்சியாக வராமல், நிறுத்தி நிறுத்திப் பேசினார். அவரால் சிறிது நேரம் கூட நிற்க முடியவில்லை. உடனடியாக உட்காருவதற்கு வசதி செய்து விஷால், விஜய் ஆண்டனி, சுந்தர் சி ஆகியோருடன் தொகுப்பாளர் கலந்துரையாடுவது போல நிகழ்ச்சியை மாற்றினார்.
விஷால் பேசியதை யு டியுபில் நேரடியாகப் பார்த்த ரசிகர்கள் பலரும் 'விஷாலுக்கு என்ன ஆச்சு' என சமூக வலைத்தளங்களில் கேட்க ஆரம்பித்தனர். கடுமையான வைரஸ் காய்ச்சலுடன் அவர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என்று தொகுப்பாளர் திவ்யதர்ஷினி விளக்கமளித்தார். இதனை டாக்டர்களும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஓய்வெடுக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர்.
காய்ச்சலுடன் அவரை இந்த விழாவுக்கு வரச் சொல்லி யார் கட்டாயப்படுத்தியது என்ற கேள்வியும் எழுந்தது. பல சிக்கல்களைக் கடந்து 12 வருடங்களுக்குப் பிறகு வரும் படம் என்பதால் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விஷால் தானாகவே வந்தார் என்று சொன்னார்கள்.