இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் |

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து திரைக்கு வந்த புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க சென்ற சந்தியா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தான். அந்த சிறுவன் செகந்திராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த விவகாரத்தில் தியேட்டருக்கு வந்து கூட்ட நெரிசல் ஏற்படுத்தி பெண் பலியாக காரணமான அல்லு அர்ஜுன் கைதாகி, ஜாமினில் வந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பார்க்க திட்டமிட்டுள்ளார். ஆனால் இது குறித்த செய்திகள் வெளியானதை அடுத்து ஆந்திராவில் உள்ள ராம் கோபால்பேட்டை போலீசார், அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நீங்கள் பார்க்க செல்லக்கூடாது. எங்களது தடையை மீறி சென்று மீண்டும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்களாம். அதன் காரணமாகவே சிறுவனை பார்க்க திட்டமிட்டு இருந்த அல்லு அர்ஜுன் அந்த முடிவை மாற்றிவிட்டாராம்.