ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
10 வருடம் தமிழ் படத்தில் நடித்தாலும் இன்னும் தமிழ் பேசத் தெரியாத மும்பை நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒரு வருடம் முறையாக தமிழ் கற்று முதல் படத்திலேயே தமிழில் பேசி, பாடி நடித்த நடிகை சாத்னா ஆப்தே.
1941ம் ஆண்டு வெளிவந்த தமிழ் படம் 'சாவித்ரி'. எமனிடம் இருந்து தனது கணவன் சத்யவானை மீட்ட சாவித்திரியின் கதை. ஹீரோயின் சப்ஜெக்ட் கதை என்பதால் அதில் முக்கியமான ஒரு நடிகையை நடிக்க வைக்க விரும்பினார் இயக்குனர் ஒய்.வி.ராவ். இவர் அந்தக் காலத்தில் தென்னிந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர். சாவித்ரியாக நடிக்க சாத்னா ஆப்தேவை அணுகிய போது நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் நான் தமிழ் கற்றுக் கொண்டுதான் நடிப்பேன். அதற்கு எனக்கு ஒரு வருடம் கால அவகாசம் வேண்டும் என்றார். இதை இயக்குனரும் ஒத்துக் கொண்டார்.
அப்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் சாத்னா ஆப்தே. மும்பையில் அவரது ஏரியாவில் ஒரு தமிழ் குடும்பம் வசித்து வந்ததை அறிந்த சாத்னா, வேடம் அணிந்து அந்த வீட்டுக்கு சென்று தமிழ் பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டார். அதன் பிறகு நடிக்க வந்தவர் அழகாக தமிழ் பேசி எல்லா காட்சியையும் ஒரே டேக்கில் ஓகே செய்தார். அதோடு படத்தில் 5 பாடல்களை அவரே பாடி அசத்தினார்.
ஆனால் பாலிவுட்டில் பிசியாக இருந்தவர் அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க இங்குள்ளவர்களுக்கு தயக்கமும் இருந்தது. இந்த படத்தில் நாரதர் வேடத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். அவர் பாடிய அத்தனை பாடல்களும் ஹிட்டானது.