வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகத்திலும் பெரும் வசூல் சாதனையைப் புரிந்த படம் 'புஷ்பா 2'. இப்படம் 1750 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஹிந்தியில் மட்டும் 770 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதுவரை வெளியான ஹிந்திப் படங்களில் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இப்படத்திற்கான அனைத்து ஏரியா தியேட்டர் உரிமை மட்டும் 600 கோடி ரூபாய் அளவில் விற்கப்பட்டது. அந்த முதலீட்டை எடுக்க மட்டுமே படம் 1750 கோடி வசூலைப் பெற வேண்டி இருந்தது. இதர செலவுகள் போக நிகர வசூலாக 800 கோடி ரூபாயைத் தற்போது கடந்துள்ளது.
இதன் மூலம் 200 கோடி ரூபாய் லாபத்தை இந்தப் படம் நெருங்கிவிட்டது. இந்திய அளவில் 'பாகுபலி 2' படம்தான் அதிக லாபத்தைக் கொடுத்த படமாக இருக்கிறது. தற்போது 'புஷ்பா 2' இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.