ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகர் ஜெயம் ரவியின் ‛அகிலன், இறைவன், சைரன், பிரதர்' ஆகிய படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. இந்த படங்களுக்கு பின் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'காதலிக்க நேரமில்லை' என்கிற படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். அவருடன் நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் லால், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முழு நீள காதல் படமாக உருவாகி உள்ள இதை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாக இருந்த அஜித்தின் ‛விடாமுயற்சி' படம் தள்ளிப்போனதால் அந்த இடத்தை நிரப்ப ஏற்கனவே 4 சிறிய படங்கள் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். இப்போது காதலிக்க நேரமில்லை படமும் பொங்கல் ரேஸில் குதிக்கிறது. இப்படம் ஜன., 14ல் பொங்கல் பண்டிகை அன்றே ரிலீஸாவதாக புத்தாண்டு தினமான இன்று(ஜன., 1) அறிவித்துள்ளனர்.