ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து அக்., 31ல் வெளியான ‛அமரன்' படம் வரவேற்பையும், வசூலையும் பெற்றது. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி இப்படம் வந்தது. தமிழ் சினிமாவில் 2024ல் அதிக லாபம் தந்த படமாக அமரன் உள்ளது. பிறமொழிகளிலும் வரவேற்பை பெற்ற இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
அமரன் படத்தை இருநாட்களுக்குமுன் பார்த்த நடிகை ஜான்வி கபூர் அதுபற்றி குறிப்பிடும்போது, ‛‛இந்த படத்தை தாமதமாகத்தான் பார்த்தேன். ஆனால் ஆச்சர்யமான, உருக்கமான படம். 2024 ஐ முடிக்க ஒரு சிறப்பான படம். மனதை தொட்ட, மனதை கனக்க செய்த ஒரு படத்தை பார்த்தேன்'' என உருகி பதிவிட்டுள்ளார்.