ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தற்போது நடித்துள்ள படம் ‛படை தலைவன்'. அன்பு என்பவர் இயக்கி உள்ளார். கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்துக்காக இளையராஜா எழுதி இசையமைத்திருந்த பாடல் ஏற்கனவே வெளியான நிலையில் சமீபத்தில் இதன் டிரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான பாச உணர்வுகளை வெளிக்காட்டும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது. அதோடு விஜயகாந்தை ஏஐ மூலம் இந்த படத்தில் காண்பிக்க உள்ளனர்.
இப்படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. இருப்பினும் பொங்கல் வெளியீட்டில் அஜித்தின் விடாமுயற்சி, ஷங்கரின் கேம் சேஞ்சர் போன்ற படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால் ரிலீஸை அறிவிக்காமல் இருந்தனர். இப்போது விடாமுயற்சி தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்துவிட்டனர். இதனால் படை தலைவன் படம் பொங்கல் வெளியீடு என தேதி குறிப்பிடாமல் அறிவித்துள்ளனர்.