கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? |
கடந்த 2004ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப்படம் தெலுங்கில் ‛7ஜி பிருந்தாவன் காலனி' என்ற பெயரில் வெளியானது. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் 7ஜி ரெயின்போ காலனி படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கப்போகிறார் செல்வராகவன். ரவி கிருஷ்ணாவே மீண்டும் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 40 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் பாதியில் நின்றதாக தகவல் வந்தது.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இன்றைய தினம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன். அதேபோல் 7ஜி பிருந்தாவன் காலனி -2 என்ற தெலுங்கு பதிப்பின் போஸ்டரும் வெளியாகியுள்ளது.