அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
2024ம் ஆண்டு இன்றோடு இனிதே நிறைவடைகிறது. நாளை 2025ம் ஆண்டு ஆரம்பமாகிறது. வரும் ஆண்டில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. குறிப்பாக சில நடிகர்களின் இரண்டு படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில், 'தக் லைப், இந்தியன் 3', அஜித் நடிப்பில் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி', தனுஷ் நடிப்பில், 'குபேரா, இட்லிகடை', சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ, சூர்யா 45', கார்த்தி நடிப்பில் 'வா வாத்தியார், சர்தார் 2', சிவகார்த்திகேயன் நடிப்பில், 'சிவகார்த்திகேயன் 24, 25வது படங்கள்', விஜய் சேதுபதி நடிப்பில், 'ஏஸ், டிரைன்', ஜெயம் ரவி நடிப்பில், 'ஜீனி, காதலிக்க நேரமில்லை, ஜெயம் ரவி 34, சிவகார்த்திகேயன் 25'(இதில் ஜெயம் ரவியும் உள்ளார்), என படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு படங்கள் வேண்டுமானால் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.
இவை தவிர மற்ற முன்னணி நடிகர்களின் ஒரு படமாவது கண்டிப்பாக 2025ல் வந்துவிடும். அதனால், 2024ல் இல்லாத வசூல் 2025ல் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.